பொதுச் சொத்து சேதம்: தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக நாகையில் தவெகவினர் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது, வேளாங்கண்ணி பேராலயத்துக்குச் சொந்தமான ஆரோக்கிய மாதா திருமண மண்டபத்தின் சுற்றுச் சுவரில் தவெக தொண்டர்கள் ஏறினர். அதனால், சுற்றுச்சுவர் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாகக் கூறி, 4 பிரிவுகளின் கீழ் தவெக நிர்வாகிகள் 5 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

பிரசாரத்தின்போது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக்கூடாது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என காவல்துறை முன்னரே அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.