மதுரையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
தவெகவின் 2வது மாநில மாநாடு ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் ஏற்கெனவே அறிவித்து இருந்தார். ஆனால், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை காரணம் காட்டி, மாநாட்டை வேறொரு தேதிக்கு தள்ளிவைக்குமாறு காவல்துறை சார்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், காவல்துறையினரின் அறிவுறுத்தலை ஏற்று, தவெகவின் மாநில மாநாடு ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக விஜய் கூறியுள்ளார்.

Comments are closed.