தனது பெயரிலோ அல்லது புகைப்படத்தையோ போலியாக சமூக ஊடகங்கள மற்றும் தொலைபேசியில் பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபடும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் மூலம் பொதுமக்களுக்கு தொலைபேசி, வாட்ஸ்ஆப், முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம் போன்ற சமூக ஊடகங்களில் பணம் கேட்டோ, வங்கி விபரங்கள் குறித்தோ அழைப்புகள் வந்தால், பொதுமக்கள் தங்களது விபரங்களை தெரிவித்து ஏமாற வேண்டாம் என இன்று வெளியிட்டு பத்திரிகை செய்திக்குறிப்பில் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல, மாவட்ட ஆட்சியர் தனக்கு வேண்டப்பட்டவர் எனச் சொல்லி வேலை வாங்கி தருவதாக பொய் வாக்குறுதிகளை நம்பி எந்தவொரு நபரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், சைபர் க்ரைம் குற்றங்களுக்கு உடனடியாக காவல்துறையை அணுகி புகார் தெரிவிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.