அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் தலித் மாணவனை தலைமை ஆசிரியர் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் கடந்த ஓராண்டாக அடித்து துன்புறுத்தி வந்ததோடு, அம் மாணவனின் ட்ரவுசருக்குள் தேளை விட்டு சித்ரவதை செய்துள்ளனர்.
இதை வெளியில் சொன்னால் சுட்டுக் கொல்லப்படுவாய் என அம் மாணவனை மிரட்டியுள்ளனர்.
இக் கொடூரச் சம்பவம் இமாச்சலப் பிரதேச தலைநகர் சிம்லாவில் ரோஹ்ரு பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி ஒன்றில் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக, அம் மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், பள்ளி தலைமை ஆசிரியர் தேவேந்திரா, ஆசிரியர்கள் பாபு ராம், கிருத்திகா தாக்கூர் ஆகிய மூவர் மீதும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Comments are closed.