வாக்காளர் பட்டியல் ‘சிறப்பு தீவிர திருத்தப்பணி’ தொடங்கியது!

தமிழ் நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையல், 234 சட்டமன்ற தொகுதகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று (நவ.4) தொடங்கியது.

முதல் கட்டமாக, இன்று (நவ.4) முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை கணக்கெடுப்பு படிவம் கொடுப்பார்கள்.
2ஆம் கட்டமாக டிசம்பர் 9-ந் தேதி வரைவு பட்டியல் வெளியிடப்படும். 3ஆம் கட்டமாக, டிசம்பர் 9ஆம் தேதி முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை ஆட்சேபணைகள், கோரிக்கைகள் பெறப்படும்.

4ஆம் கட்டமாக, பெறப்பட்ட கோரிக்கைகள், ஆட்சேபணைகள் ஆகியவை மீது விசாரணை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிடப்படும்.

Comments are closed.