மாலி நாட்டில் தங்கி பணிபுரிந்துவந்த இந்தியர்கள் 5 பேரை பயங்கரவாத கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள கோப்ரி பகுதியில் இயங்கிவரும் ஒரு நிறுவனத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகள் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த 5 இந்தியர்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.
கடத்தப்பட்ட இந்தியர்கள் மின்மயமாக்கல் திட்டங்களில் பணிபுரிந்து வந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அந் நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற இந்தியர்கள் தலைநகர் பமாகோவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இன்னும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Comments are closed.