மெட்ரோ ரயிலில் சரியான நேரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நுரையீரல்!

உறுப்பு மாற்று சிகிச்சைக்காக பெங்களுரிலிருந்து விமானத்தில் எடுத்துவரப்பட்ட நுரையீரல், சென்னை விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு மெட்ரோ ரயிலில் சரியான நேரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் உள்ள நோயாளிக்கு உறுப்பு மாற்று சிகிச்சையில் பொருத்துவதற்காக, தானமாகப் பெறப்பட்ட நுரையீரல் கர்நாடக மாநிலம் பெங்களுரில் இருந்து சனிக்கிழமை விமானத்தில் கொண்டு வரப்பட்டது.

அதைக் கொண்டுவந்த மருத்துவக் குழுவினர் விமானநிலையத்தில் இருந்து பிற்பகல் 2.07 மணிக்கு மெட்ரோ ரயிலில் ஏறினர். அங்கிருந்து 7 மெட்ரோ ரயில்நிலையங்களைக் கடந்து பிற்பகல் 2.28 மணிக்கு ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையத்தை அடைந்தனர்.

அதைத் தொடர்ந்து கிரீம்; சாலையில் அப்போலோ மருத்துவமனைக்கு நுரையீரல் கொண்டு செல்லப்பட்டு மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது என அச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Comments are closed.