போதைப் பொருள் வழக்கில் நவ.11ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் ஸ்ரீகாந்துக்கு இரண்டாவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரும்; கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள அவ்விருவர் மீதும் முறைகேடான பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
அவ்விருவரையும் அக்.28ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை ஏற்கெனவே சம்மன் அனுப்பி இருந்தது. நடிகர் கிருஷ்ணா மட்டும் விசாரணைக்கு ஆஜரானார். ஆனால் நடிகர் ஸ்ரீகாந்த் விசாரணைக்கு ஆஜராகவில்லை. தனக்கு மேலும் கால அவகாசம் வழங்குமாறு நடிகர் ஸ்ரீகாந்த் அமலாக்கத்துறைக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கில் நவம்பர் 11ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு 2வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இம்முறை சம்மனை ஏற்று நடிகர் ஸ்ரீகாந்த் விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.