பெண் உயரதிகாரியிடம் வாக்குவாதம்: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவல் உதவி ஆணையர்!

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி வாகனங்களை ஒழுங்குபடுத்தக் கூறிய காவல் இணை ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோயம்பேடு காவல் உதவி ஆணையர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (செப்.2) சென்னை நந்தம்பாக்கத்தில் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது நிறுவன தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார்.

குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, நந்தம்பாக்கம் பகுதியில் வாகனங்களை ஒழுங்குபடுத்துமாறு காவல் இணை ஆணையர் திஷா மிட்டல் கூறியுள்ளார். அப்போது அவரிடம் சென்னை கோயம்பேடு காவல் உதவி ஆணையர் சரவணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சென்னை கோயம்பேடு காவல் உதவி ஆணையர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Comments are closed.