‘கூலி’ பட வில்லன் சௌபின் ஷாஹிர் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை!

பண மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டபட்டுள்ளதைத் தொடர்ந்து, ‘கூலி’ திரைப்பட வில்லன் சௌபின் ஷாஹிர் துபாய் செல்ல கொச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும் வசூல் ஈட்டிய மலையாள படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது நிதி மோசடி புகார் கூறப்பட்டது.

அரூரைச் சேர்ந்த சிராஜ் என்பவர், படத்தின் பின்னணியில் உள்ள தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய நபர்களால் தான் ஏமாற்றப்பட்டதாக குற்றஞ்சாட்டி இருந்தார்.


தான் ரூ.7 கோடி முதலீடு செய்து இருந்ததாகவும், படம் வணிக ரீதியாக வெற்றிபெற்ற பிறகு தனக்கு வாக்களித்தபடி 40 சதவீத லாப பங்கு கிடைக்கவில்லை என்றும், இம் மோசடியால் தனக்கு ரூ.47 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சிராஜ் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், சினிமா துறையில் நிதி மோசடிகள் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியது. மஞ்சுமெல் பாய்ஸ் பட புகார் குறித்தும், படத்தின் தயாரிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட கருப்பு பண பரிவர்த்தனை குறித்தும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
அப் படத்தின் நடிகரும், மற்றொரு தயாரிப்பாளருமான சவுபின் ஷாஹிரிடம் படம் தயாரிப்பு முதலீடு, வரவு, செலவு குறித்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, நிதி மோசடி வழக்கில் அவருக்கு கேரள உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. அவ் வழக்கில் நடிகர் சௌபின் ஷாஹினுக்கு பல்வேறு நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்திருந்தது.

இந்நிலையில், துபாயில் நடைபெறவுள்ள விருது பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி கேட்டு கொச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் நடிகர் சௌபின் ஷாஹிர்.
ஆனால், அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

நடிகர் சௌபின் ஷாஹிர் துபாய் செல்ல நீதிமன்றம் தடைவித்துள்ளது மலையாள திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, நடிகர் சௌகின் ஷாஹித் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகி மேல்முறையீடு செய்து வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.