காவல் நிலையத்தில் நூலகம்: தமிழக ஏடிஜிபி திறந்து வைத்தார்!

பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் கும்பகோணம் நகர மேற்கு காவல் நிலையத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நூலகத்தை தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  திறந்து வைத்தார்.

காவல் நிலையங்களை நாடி வரும் பொதுமக்கள் அச்சமின்றி காவலர்களுடன் நல்லுறவை பேணும் வகையிலும், காவல்நிலையம் என்றாலே குற்றவாளிகள் வந்து போகும் என்ற நிலையை மாற்றி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந் நூலகத்திற்கு ‘அறிவகம்’ என பொருத்தமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, கும்பகோணம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் தமிழக ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அப்போது, தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் ஜியாவுல் ஹக், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம், கும்பகோணம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கிட் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.

Comments are closed.