கரூரில் தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற இடத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு ஆய்வு செய்து, நடைபெற்ற சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் இன்று காலை 11.10 மணியளவில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றவர்களின் காலணிகள் சிதறிக் கிடந்ததையும் பார்வையிட்டனர்.

பின்னர், கூட்ட நெரிசலில் சிக்கிகரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சைப் பெற்றுவருபவர்களிடம் அமைச்சர் நிர்மலா சீதாராமன் நலம் விசாரித்தார்.
நெரிசலில் சிக்கி ஒரே கிராமத்தைச் சேர்ந்த, அதாவது ஏழூர் கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர்களின் வீடுகளுக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறினார்.

Comments are closed.