‘கரூர் துயரத்திற்கு செந்தில் பாலாஜியே காரணம்’ என கடிதம் எழுதிவிட்டு தவெக நிர்வாகி தற்கொலை!

கரூர் துயரத்திற்கு செந்தில் பாலாஜியே காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தவெக கிளைச் செயலாளர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

செஞ்சி வட்டம் மயிலம் தொகுதி வல்லம் ஒன்றியம் விற்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தவெக கிளைச் செயலாளர் ஐயப்பன்(50). விஜய் ரசிகர் மன்றம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே தீவிர ரசிகராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு தனது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அக் கடிதத்தில் ஐயப்பன் கூறியிருப்பதாவது:

“கரூர் மாவட்டத்தில் விஜய் வருகை போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை. விஜய் ரசிகர்கள் நன்றாக வேலை செய்தார்கள். செந்தில் பாலாஜி அவர்கள் நூதன முறையில் நெருக்கடி கொடுத்த செந்தில் பாலாஜி மூலமாக இத்துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. போலீஸ{ம் இதற்கு உடந்தை. அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” என அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.


கரூர் நிகழ்வால் ஏற்பட்ட ஆதங்கமே ஐயப்பனின் இம்முடிவுக்கு காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

போலீஸார் ஐயப்பனின் உடலைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.