ஆந்திர மாநில இளம்பெண்ணை கொடூரமாக கூட்டுப் பாலியல வன்கொடுமை செய்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகிய இருவரும் தற்போது காவல்துறையில் இருந்து நிரந்தர பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலையில் தனது உறவினர்களுடன் வாகனத்தில் வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதோடு, தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், அவ்விருவரும் தற்போது நிரந்தர பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்யப்பட்டுள்ளனர்.

Comments are closed.