எம்ஜிஆரைவிட ஸ்டாலினுக்கு மகளிர் ஆதரவு பெருகி வருகிறது!

புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு இருந்த மகளி;ர் ஆதரவை எல்லாம் தாண்டி, இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகி வருகிறது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

நெல்லையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ‘அங்கிள்’ எனக் குறிப்பிட்டது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, முதல்வரை யார் எந்த பெயர் வைத்து அழைத்தாலும், மீண்டும் அவர்தான் தமிழகத்தின் முதல்வராக வருவார் என்றார் அமைச்சர் நேரு.


பொதுமக்கள். குறிப்பாக மகளிர் மத்தியில் முதல்வர் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய ஆதரவு அலை வீசி வருகிறது எனக் கூறிய அமைச்சர் நேரு, புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு இருந்த மகளிர் ஆதரவை எல்லாம் தாண்டி, இப்பேர்து முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகி வருகிறது என்றார்.

நடைபெறவிருக்கும் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெற்று, மீண்டும் திமுக ஆட்சி அமையும். எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என்றார் அமைச்சர் நேரு.
தமிழகத்தைப்; பொருத்தவரை, திமுகவுக்கு போட்டியே கிடையாது. ஏதிரணியில் யார் நின்றாலும், நாங்கள்தான் மகத்தான வெற்றி பெறுவோம் என்றார் அமைச்சர் நேரு.

Comments are closed.