பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை: 52 வயது ஆசிரியர் கைது

பிளஸ்-2 மாணவியை அடிக்கடி தனது காரில் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக தனியார்  பள்ளி கணித ஆசிரயரை கீரனூர் அனைத்து காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராகப் பணிபுரியும் 52 வயதுடைய வில்லியம் பால்ராஜ் என்பவர் 16 வயதேயான பிளஸ்-2 மாணவியை அடிக்கடி தனது காரில் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கோட்டை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லதாவிடம் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில், விசாரணை நடத்திய போலீஸார், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் வில்லியம் பால்ராஜ் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Comments are closed.