கரூரில் செப்.27ல் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ விசாரணையை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைiயிலான 3 பேர் கொண்ட குழு கண்காணிக்கும் என்றும், இக் கண்காணிப்புக் குழுவில் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த இரண்டு ஐபிஸ் அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என்றும், ஆனால் அவ்விருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது என்றும் உச்சநீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி, என்.வி.அஞ்சாரியா கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மக்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்த விவகாரமாக இதைக் கருதுவதாகவும், நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை மக்களின் உரிமை என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மனைவி மற்றும் பிள்ளையை பிரிந்து வாழ்ந்துவரும் பன்னீர் செல்வம் என்பவர், பிள்ளை இறந்தது குறித்து குடும்பத்தாருக்கு தெரியாமல் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாகவும், மனைவியை இழந்த செல்வராஜ் என்பவரிடம் அதிமுகவினர் போலியாக கையெழுத்து வாங்கி மனு தாக்கல் செய்ததாகவும் புகார் எழுந்தது.
மனுதாரர்களுக்கு தெரியாமல் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளனர் என அபிஷேக் சிங்வி வாதத்தை முன் வைத்த நிலையில், பன்னீர்செல்வத்துக்கு எதிராக அவரது மனைவி சர்மிளா காணொலி வாயிலாக ஆஜராகி, தவெகவின் நிவாரணத் தொகைக்காக பன்னீர்செல்வம் வழக்குத் தொடர்ந்ததாக சாட்சியமளித்துள்ளார்.

Comments are closed.