முதல்வர் எப்படி காரணமாக இருக்க முடியும்?: ராமதாஸ் கேள்வி!

கரூர் துயரச் சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் எப்படி காரணமாக இருக்க முடியும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுள்ளார்.

தைலாபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராமதாஸ் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வீடியோ குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, “கரூர் சம்பவத்திற்கு முதல்வர் எப்படி காரணமாக இருக்க முடியும்? முதல்வர் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்திருக்கிறார்” என்றார் ராமதாஸ்.

மேலும், ‘இன்றைக்கு பொதுவாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களைப் பார்ப்பதற்கே மக்கள் பயப்படுகிறார்கள்.

கரூரில் நடந்தது போன்ற துயரச் சம்பவங்கள் ஏற்படாமல் அரசியல் கட்சிகள் இனி பார்த்துக் கொள்ள வேண்டும். ஓர் உயிர்கூட பாதிப்பு ஏற்படாதவாறு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். காவல்துறையும் அதற்கு வழகாட்ட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்றார் டாக்டர் ராமதாஸ்.

Comments are closed.