ஏஐ மூலம் ஆபாச வீடியோ: ரூ.4 கோடி கேட்டு யூடியூப் மீது நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு!

ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக வீடியோக்கள் உருவாக்கி வெளியிடப்பட்டது தொடர்பாக, யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனங்களிடம் ரூ.4 கோடி இழப்பீடு கேட்டு நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதி டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்;ந்துள்ளனர்.

இதுகுறித்து கடந்த செப்.6ஆம் தேதி தாக்கல் செய்துள்ள மனுவில், தங்களைப் பற்றிய அவதூறு வீடியோக்களை முழுவதும் நீக்க வேண்டும். இதுபோல ஏஐ மூலம் உருவாக்கப்படும் ஆபாச வீடியோக்களை பதிவிடுவதை தடுக்க, யூடியூப் நிறுவனத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

குறிப்பாக, தங்களின் பெயர்கள், குரல்கள் மற்றும் ஃபோட்டோக்களை ஏஐயால் தவாறக பயன்படுத்த முடியாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஒரு குறிப்பிட்ட யூடியூப் சேனலில நடிகர்கள் சல்மான் கான், அபிஷேக் பச்சன், நடிகைகள் பூஜா ஹெக்டே, ஐஸ்வர்யா ராய் உள்பட பல பிரபலங்ளின் இருநூறுக்கு மேற்பட்ட டீப் ஃபேக் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வீடியோக்கள் மொத்தம் 1.65 பார்வைகளை கொண்டுள்ளது.

இதில் சல்மான் கானுடன் ஐஸ்வர்யா ராய் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோக்கள் ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்டு இருப்பதை தங்கள் மனுவில் ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் தம்பதி குறிப்பிட்டுள்ளது.

Comments are closed.