தங்கத்தை அள்ளிக் கொடுத்தாலும் திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்லூர் ராஜு, மதுரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் நடைபெற்றுள்ள ஊழலைக் கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
வீடுகளுக்கு அனுமதி பெற்று வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் கட்டப்படுவதாகவும் செல்லூர் ராஜு குற்றஞ்சாட்டினார்.
மதுரை மாநகராட்சி நிர்வாகம் மிக மோசமாக நடைபெறுகிறது. மக்களின் பிரச்சினைகளை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை எனக்கூறிய செல்லூர் ராஜு, திமுக தங்கத்தை அள்ளிக் கொடுத்தாலும் திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.

Comments are closed.