திமுக அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு எதிராக அவ்வப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறிவந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ஆதம்பாக்கத்தில் இன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஏதோ ஒரு தீவிரவாதியை கைது செய்வதைப் போல, அவரது வீட்டை சுற்றி வளைத்து நின்று, தீயணைப்பு படையினரின் உதவியுடன் அவரது வீட்டுக் கதவை உடைத்து திறந்து உள்ளே சென்று சவுக்கு சங்கரை கைது செய்தனர்.
அவதூறாக பேசி தன்னிடம் ரூ.2 லட்சம் பறித்துவிட்டதாக ஆயிஷா என்ற சினிமா தயாரிப்பாளர் கடந்த மாதம் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்ததாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில், அவரை போலீஸார் கைது செய்தனர்.
ஏதோ ஒரு தீவிரவாதியை கைது செய்வதைப்போல அவரது வீட்டை போலீஸார் சுற்றி வளைத்தனர். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் போலீஸாரால் அவரை உடனே கைது செய்ய முடியவில்லை.
வீட்டிற்குள் இருந்த சவுக்கு சங்கர், தன்னை கைது செய்வதற்காக போலீஸார் வந்திருப்பதாக, வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவ் வீடியோ வைரலாகி பேசுபொருளானது.
இந்நிலையில், தீயணைப்பு படையினரின் உதவியுடன் அவரது வீட்டின் கதவை உடைத்து திறந்து அவரை கைது செய்தனர் போலீஸார்.
காவல்துறையினரின் இச் செயல் பொதுமக்கள் மத்தியில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக கடும் அதிருப்தியையும் அவப்பெயரையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.