இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற சண்டை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முயற்சியால் முடிவுக்கு வந்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்நிலையில், காசாவைச் சேர்ந்த ஹம்தன் ஹதாத் என்ற சமையல்காரருக்கு அக்டோபர் 16 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அக் குழந்தைக்கு ‘சிங்கப்பூர்’ என பெயர் சூட்டியுள்ளார ஹம்தன் ஹதாத்.
போர் காலத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த அறக்கட்டளை ஒன்று மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவிகளுக்காக, அதை கௌரவிக்கும் விதமாக அந்நாட்டின் பெயரை தனது மகளுக்கு சூட்டியுள்ளார் ஹம்தன் ஹதாத்.

Comments are closed.