முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் ஈரோடு அரசு விளையாட்டு விடுதி மாணவி ரேணுகாதேவி 2 தங்கப் பதக்கங்கள்; வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில் சென்னை, செங்கல்பட்டு, மதுரை, கோவை உள்ளிட்ட 13 இடங்களில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுப்பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர் என 5 பிரிவுகளில் நடைபெறும் இப் போட்டிகளில் 30,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
மதுரையில் அண்மையில் நடைபெற்ற மும்முனை மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்ற ஈரோடு அரசு விளையாட்டு விடுதியைச் சேர்ந்த பிளஸ் 1 வகுப்பு மாணவி ரேணுகாதேவி இரண்டு போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்றார்.
அவருக்கு ஈரோடு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சதீஷ்குமார் பாராட்டு தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

Comments are closed.