தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரரான அனில் அம்பானிக்கு சொந்தமான ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு ‘யெஸ்’ வங்கி 3000 கோடி ரூபாய் கடன் வழங்கியது.
ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதான அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில், அனில் அம்பானி ரூ.17,000 கோடி பண மோசடி செய்துவிட்டதாக இரண்டு வழக்குகனை சிபிஐ பதிவு செய்தது.
இதனிடையே, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. அவரது வீடு, அலுவலகம் உள்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இது தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டதன்பேரில், அனில் அம்பானி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இவ்வழக்கில், அடுத்தகட்ட நடவடிக்கையாக, இன்று அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக்குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Comments are closed.