சேந்தமங்கலம் பழங்குடியினர் தொகுதி திமுக எம்எல்ஏ கு. பொன்னுசாமி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 74.
கொல்லிமலையில் உள்ள இல்லத்தில் வசித்துவந்த பொன்னுசாமிக்கு இன்று காலை நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பொன்னுசாமிக்கு ஏற்கெனவே இரண்டு முறை நெஞ்சு வலி ஏற்பட்டு, ஒரு முறை ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்த பொன்னுசாமி கடந்த 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் திமுகவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து, 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2021 தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர்.

Comments are closed.