தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த பக்தரகள்!

தீபாவளி திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பக்தர்கள் அதிகாலை முதலே கோயில்களுக்குச் சென்று நீண்ட வரிசைகளில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, உலக பிரசித்திபெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தீபாவளி திருநாளை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோவிலிலுள்ள பெருவுடையாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, இளநீர், கரும்புச் சாறு, தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட பெருவுடையாருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Comments are closed.