14 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி நாளில் சென்னையில் கனமழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தனியார் வெதர்மேன் என அறியப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், வானிலை நிலவரங்களை அவ்வப்போது சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார்.
சென்னையில் தீபாவளி நாளில் மழை என்பது கடந்த 2011ஆம் ஆண்டுதான் கடைசியாக பெய்தது. அதற்குப் பிறகு இன்றுதான் (அக்.20) சென்னையில் கன மழை பெய்துள்ளது என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், “என்ன ஒரு தீபாவளி நாள், கடந்த 2011ஆம் ஆண்டுதான் தீபாவளி நாளில் சென்னையில் இப்படி ஒரு கனமழை பெய்தது.
தென் சென்னை பகுதிகளான கிழக்கு கடற்கரைச் சாலை (ECR), பழைய மகாபலிபுரம் சாலை (OMR) உள்ளிட்ட இடங்களில் நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது.
தீபாவளி நாளான இன்று தொடர் மழை பெய்யும். அதேசமயத்தில் விழாவினைக் கொண்டாட இடைவேளையும் கிடைக்கும். மழையுடன் கூடிய திருநாளை அனுபவிங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.