தீபாவளி: ரூ.7,000 கோடி பட்டாசுகள் விற்பனை!

தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசியில் இந்த ஆண்டு சுமார் ரூ.7,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகி உள்ளதாக பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ரூ.6,000 கோடிக்கு விற்பனை ஆன நிலையில், இந்த ஆண்டு கூடுதலா ரூ.1,000 கோடி விற்பனை ஆகியுள்ளது.

ஆண்டுதோறும் புதுப்புது ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பீட்சா, வாட்டர்மெலன் உள்ளிட்ட பல்வேறு வகை பட்டாசுகளும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.


கடந்த சில ஆண்டுகளாக தில்லியில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு பட்டாசு வெடிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாகவும் பட்டாசு விற்பனை அதிகரித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Comments are closed.