நடிகராக அவதாரமெடுக்கும் எச்.ராஜா

அவ்வப்போது பரபரப்பான கருத்துகளைக் கூறி பொதுமக்களை மகிழ்வித்து, தமிழக அரசியலில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா தற்போது திரைத்துறையிலும் கால் பதித்துள்ளார்.

ஆம். பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா கந்தன்மலை என்ற திரைப்படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

சிவபிரபாகரன் மற்றும் சந்திரமோகன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை வீரமுருகன் என்பவர் இயக்குகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அதில், பெரிய மீசையுடன், கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருப்பது போன்ற படம் வெளியாகி உள்ளது.

Comments are closed.