மயிலாடுதுறை எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு!

தில்லியில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாடுதுறை மக்களவை தொகுதி உறுப்பினர் (எம்.பி) சுதாவின் 4.5 பவுன் தங்கச் சங்கிலியை ஸ்கூட்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பறித்துச் சென்றுவிட்டார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதா அதில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், தமிழ்நாடு இல்லத்தில் இருந்து அவர் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து ஸ்கூட்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர், சுதா அணிந்திருந்த 4.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் வேளையில், நாட்டின் தலைநகரான தில்லியில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.ஒருவரின் நகையை அடையாளம் தெரியாத நபர் பறித்துச் சென்றுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.