பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் ‘அதிரடி’ நடவடிக்கை!

பாமகவின் செயல் தலைவராக இருந்துவந்த அன்புமணி ராமதாஸ் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அனுப்பி வைக்கப்பட்ட நோட்டீஸ{க்கு உரிய விளக்கம் அளிக்க ராமதாஸ் அளித்த கெடு நேற்றுடன் (செப்.10) முடிவடைந்த நிலையில், அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கி அறிவித்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய டாக்டர் ராமதாஸ், ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கையின் அடிப்படையில், பாமக செயல் தலைவர் உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுவதாக அறிவித்தார்.
இருமுறை நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை அன்புணி விளக்கம் அளிக்கவில்லை என்றும், தன் தரப்பில் எந்த நியாயமும் இல்லை என்பதால் தான் அன்புமணி விளக்கம் அளிக்கவில்லை என்றார் டாக்டர் ராமதாஸ்.

விளக்கம் அளிக்காததால் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவே அர்த்தம் என்றும், இதுவரை எவரும் கட்சியில் செயல்படாத வகையில் தான்தோன்றித்தனமாக அன்புமணி செயல்பட்டுள்ளார் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

Comments are closed.