‘நவீன ஹிட்லர்…’ என ட்ரம்ப்-பின் முகத்திற்கு நேரே கோஷமிட்ட போராட்டக்காரர்கள்!

உணவகத்தில் சாப்பிட சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-பை, அவரது முகத்திற்கு நேரே, ‘நவீன ஹிடலர்’ என போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள பிரபல உணவகத்தில் இரவு உணவருந்த சென்றுள்ளார்.
அப்போது, அங்கு வந்த போராட்டக்காரர்கள் குழு, ‘டி.சி-க்கு விடுதலை’, ‘ பாலஸ்தீனத்திற்கு விடுதலை’ என கோஷங்களை எழுப்பினர்.

மேலும், ட்ரம்ப்-பை ‘நவீன கால ஹிட்லர்’ என்றும் குறிப்பிட்டு கோஷங்கள் எழுப்பினர்.
அவர்களது கோஷங்களைக் கேட்ட ட்ரம்ப், அவர்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு சைகை காட்டினார்.

இவ் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

‘கோட் பிங்க்’ என்ற பெண்ணிய செயற்பாட்டாளர் குழு இப் போராட்டத்திற்கு பொறுப்பேற்றுள்ளது.

வாஷிங்டன் பாதுகாப்பற்றதாக இருப்பதாகக் கூறி, அண்மையில் வாஷிங்டன் டி.சி.காவல்துறையை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ட்ரம்ப் கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.