வாக்கு திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பிகாரில் தொடங்கியுள்ள யாத்திரையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆக.27-ஆம் தேதி பங்கேற்கவுள்ளார்.
இந்த யாத்திரையில், ஆகஸ்ட் 26, 27 தேதிகளில் பிரியங்கா காந்தியும், தமிழக முதல்வர் ஸ்டாலின் 27-ஆம் தேதியும், கர்நாடக முதல்வர் சித்தராமையா 29-ஆம் தேதியும் பங்கேற்கின்றனர்.
இதேபோல, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தெலுங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சுகு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த யாத்திரையில் கலந்து கொள்கின்றனர் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

Comments are closed.