பொதுமக்களை அச்சுறுத்திவரும் புலியைப் பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைப்பு!

நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து இதுவரை 13 வளர்ப்பு மாடுகளை வேட்டையாடி பொதுமக்களை அச்சுறுத்திவரும் புலியைப் பிடிக்க முதுமலையில் இருந்து விஜய், வசீம் ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட சர்க்கார் மூலை, பாடந்தொரை ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் புலி ஒன்று கடந்த ஒரு மாத காலமாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விவசாயிகளின் கால்நடைகளைக் கொன்று பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

இப் புலியை கூண்டு வைத்து பிடிக்கவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், பொதுமக்களை அச்சுறுத்திவரும் புலியைப் பிடிக்க முதுமலையில் இருந்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Comments are closed.