முதியோர்-மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே தேடிச் சென்று ரேசன் பொருட்களை வினியோகிக்கும் தாயுமானவர் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்டையார்பேட்டையில் இன்று தொடங்கி வைத்தார்.
இத் திட்டத்தின் வாயிலாக தமிழகம் முழுவதும் உள்ள 34,809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15.81 லட்சம் குடும்ப அட்டைகளில் உள்ள 20.42 லட்சம் பயனாளிகளும், 91,969 குடும்ப அடடைகளில் உள்ள 1.27 லட்சம் மாற்றுத் திறனாளிகளும் பயனடைவர்.

அதாவது, மொத்தம் 16.73 லட்சம் குடும்ப அட்டைகளில் உள்ள 21.70 லட்சம் பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் அவரவர் வீடுகளுக்கே தேடிச் சென்று ரேசன் பொருள்கள் வினியோகிக்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.