பழங்குடியின மாணவிக்கு பாலியல் வன்கொடுமை : சிறப்பு எஸ்.ஐ. கைது!

பழங்குடியின கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுட்ட 55 வயது சிறப்பு உதவி ஆய்வாளர் இன்று கைது செய்யப்பட்டார்.

கொல்லிமலை வாழவந்திக்காடு காவல் நிலையத்தில் காவலர்களுக்கு உணவு சமைத்து தரும் சமையலரின் 16 வயது மகள், திண்டுக்கலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

வாழவந்திக்காடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவரும் மோகன்குமார் (55) கடந்த 6ஆம் தேதி பணி நிமித்தமாக கொல்லிமலையில் இருந்து ராசிபுரம் நோக்கி காரில் புறப்பட்டார்.

அப்போது, கல்லூரிக்குப் புறப்பட்ட சமையலரின் மகளை காரில் அழைத்துச்சென்று ராசிபுரத்தில விடுவதாக சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கல்லூரி மாணவியும் அவரது தந்தையுமான சமையலரும் காரில் ஏறி வந்தனர். கொல்லிமலை அடிவாரம் முள்ளுக்குறிச்சி பகுதியில் சமையலர் இறங்கிவிட, மாணவி மட்டும் சிறப்பு உதவி ஆய்வாளருடன் காரில் பயணித்துள்ளார்.
அப்போது, அம் மாணவியை சிறப்பு உதவி ஆய்வாளர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். மேலும், இச் சம்பவத்தை வெளியில் சொன்னால் அவ்வளவுதான என மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து, அம் மாணவி தனது பெற்றோரிடம் தெரிவிக்க, நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன்குமார் மீது புகார் அளிக்கப்பட்டது.

மகளிர் காவல் நிலைய போலீஸார் நடத்திய விசாரணையில் மாணவியின் புகார் உண்மை எனத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.விமலா உத்தரவின்பேரில், உதவி காவல் ஆய்வாளர் மோகன்குமாரை மகளிர் காவல் நிலைய போலீஸார் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கைது செய்தனர்.

Comments are closed.