கர்நாடகத்தில் பெண் வாக்காளர் ஒருவர் இரண்டு முறை வாக்களித்து இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி இருக்கும் நிலையில், அதற்கான ஆவணச் சான்றுகள் ஏதேனும் இருப்பின் சமர்ப்பிக்குமாறு கூறி அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடக மாநில தலைமை தேர்தல் அலுவலர் இதுகுறித்து ராகுல் காந்திக்கு அனுப்பியுள்ள அறிவிப்பாணையில் தெரிவித்திருப்பதாவது:
வாக்குச் சாவடி அதிகாரி வெளியிட்ட தரவுகளின்படி, ஒரு குறிப்பிட்ட பெண் வாக்காளர் இருமுறை வாக்குப்பதிவு செய்திருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் விசாரணையில், அவ் வாக்காளர் ஒரேயொரு முறை வாக்குப்பதிவு செய்ததாக கூறியுள்ளார்.
ராகுல் காந்தி காட்டிய ஆவணங்கள் மேற்கண்ட அதிகாரியால் வெளியிடப்பட்டதல்ல என்பது தேர்தல் ஆணைய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆகவே, மேற்கண்ட ஆவணங்கள் எங்களுக்கு கிடைத்தால் இவ்விவகாரத்தில் விரிவான விசாணை மேற்கொள்ள முடியுமென்று கர்நாடக மாநில் தலைமை தேர்தல் அலுவலர் ராகுல் காந்திக்கு அனுப்பியுள்ள அறிவிப்பாணையில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.