மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது கட்சி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் சனாதனத்திற்கு எதிராக கருத்துகள் தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்ய துணைத் தலைவரும் ஓய்வுபெற்ற ஐ.ஜி.யுமான மௌரியா தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை காவல் ஆணையரை சந்தித்து, கொலை மிரட்ட விடுத்துள்ள சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர்.

Comments are closed.