கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த சுகுணா (65) என்பவர் சிகிச்சைப் பலனின்றி இன்று (செப்.29) இறந்தார். இதன்மூலம், கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரழந்தோரின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் மொத்தம் 51 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவரின் நிலைமை மட்டும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், மற்றவர்கள் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இவர்கள் தவிர, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 31 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

Comments are closed.