அழுகுரல் ஏற்படுத்திய வலி நெஞ்சத்திலிருந்து அகலவில்லை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கரூரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழ்ந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும், அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை…” என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழ்ந்தவர்களின் குடும்பத்தினரை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Comments are closed.