எம்.ஆர்.ராதாவின் மனைவி காலமானார்!

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா ராதா வயது முதிர்வு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 86.

அவரது உடல் இறுதி மரியாதை செலுத்துவதற்காக சென்னை போயஸ் கார்டன் பின்னி சாலையில் உள்ள மனசாரவா குடியிருப்பு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குகள் இன்று (செப்.22) மாலை 4.30 மணிக்கு மேல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.