தவெக மாவட்டச் செயலாளர் கைது!

நீதிபதி குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவிட்டதாக தமிழக வெற்றிக் கழகத்தின் திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் நிர்மல்குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது கரூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் தலைமறைவாகினர். அவர்களை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். இவ்வழக்கில் ஏற்கெனவே அக்கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கில் நீதிபதி குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவிட்டதாக அக்கட்சியின் திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் நிர்மல்குமாரை சாணார்பட்டி போலீஸார் கைது செய்துள்ளனர்.

Comments are closed.