2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும், அனைத்து கட்சிகளுக்குமே பாதிப்பு இருக்கும் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், மறைந்த விஜயகாந்த் எப்படி 2006 தேர்தலில் தாக்கத்தை கொடுத்தாரோ, அதேபோல வருகிற 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவே கருதுகிறேன். அனைத்து கட்சிகளுக்குமே பாதிப்பு இருக்கும் எனத் தெரிவித்தார்.
“நான் சொல்வது யதார்த்தம். அதற்காக அவருடன் கூட்டணிக்குச் செல்கிறேன் என அர்த்தமல்ல. யதார்த்தத்தை பேசுகிறேன். பல இடங்களில் நண்பர்கள், கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. அதைத்தான் நான் சொல்கிறேன்” என்றார் டிடிவி தினகரன்.

Comments are closed.