கொள்கையில் சரிவு ஏற்பட்டு திக்கு தெரியாத காட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறார் திருமாவளவன என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
இது குறித்து செல்லூர் ராஜு அளித்துள்ள பேட்டி:
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் திடுமென எம்ஜிஆர்., ஜெயலலிதா குறித்து ஏன் விமரிசித்தார் எனத் தெரியவில்லை. ஆனால், அவர் பாதை மாறி நாட்டிலிருந்து காட்டுக்குள் போய்விட்டார்.
வேங்கைவயல் பிரச்சினையில் அவர் இதுவரை தேடிய தீர்வு என்ன? நெல்லை வாலிபர் கவின் ஆணவ கொலையில், எந்த நீதி கேட்டு திருமாவளவன் போராடினார்? சமீபகாலமாக, கொள்கையில் சரிவு ஏற்பட்டு திக்கு தெரியாத காட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறார் திருமாவளவன் எனத் தெரிவித்தார் செல்லூர் ராஜு.
மக்கள் சேவையுடன் கூடிய அரசியல் செய்ய வேண்டும் என்றால், நடிகர் விஜயர் பனையூரில் இருந்து வெளியே வரவேண்டும். மக்களை சந்தித்து அரசியல் செய்ய வேண்டும் என்றார் செல்லூர் ராஜு.
இதை செய்யவில்லை என்றால், வரும் சட்டசபை தேர்தலிலேயே அவர் காணாமல் போய்விடுவார் எனக் கூறிய செல்லூர் ராஜு, “எல்லோரும் எம்ஜிஆராக முடியாது. தமிழகத்திற்கு ஒரே ஒரு எம்ஜிஆர் தான் இருக்க முடியும். அவரும் மறைந்து விட்டார் எனத் தெரிவித்தார்.

Comments are closed.