லஞ்சப் புகார்: எஸ்ஐ உள்பட 5 பேர் பணி இடைநீக்கம்!

லஞ்சப் புகாரில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட தாம்பரம் மாநகர காவல்துறையைச் சேர்ந்த 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சேலையூர் சந்தோஷ்புரத்தில் அதிக பாரம் ஏற்றி வந்த சுமை ஆட்டோ ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட புகாரில் சேலையூர் போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளர் வெங்கடேசன், தலைமைக் காவல் ஜலேந்திரன், காவலர் கதிரேசன் ஆகிய 3 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல, மேடவாக்கம் காவல்நிலைய தலைமைக் காவலர் திருமுருகன், காவலர் வெங்கடேசன் ஆகியோர் செப்.25ஆம் தேதி அப்பகுதியில் சாலையோர உணவக உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலானது. இதையடுத்து அவ்விருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், இச் சம்பவம் தொடர்பாக தாம்பர் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின்பேரில், காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவ்விருவரும் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது.

அவ்விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தலைமைக் காவலர் திருமுருகன், காவலர் வெங்கடேசன் ஆகிய இருவரையும் பணி இடைநீக்கம் செய்து காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

Comments are closed.