‘த வயர்’ செய்தி இணையதளத்தில் வெளியான செய்திக்காக அதன் நிறுவனர் சித்தார்த் வரதராஜன், அதன் மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பர் ஆகியோர் மீது அஸஸாம் மாநில போலீஸார் தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி இருவரும் ஆஜராகுமாறு கூறி சம்மன் அனுப்பியுள்ளனர் அம் மாநில க்ரைம் பிராஞ்ச் போலீஸார்.
அவ்விருவர் மீதும் குற்றவியல் சட்டப் பிரிவுகள் 152,196, 197(1)(ன)/3(6), 353, 45, 61 ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் 152-வது பிரிவானது இந்திய இறையாண்மை, ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான தண்டனை வழங்கும் பிரிவு. 2022-ல் தேசத் துரோக சட்டப் பிரிவு 124-யுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில் அதற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டதுதான் 152-வது பிரிவு.
அஸ்ஸாம் மாநில போலீஸார் ஏற்கெனவே சித்தார்த் வரதராஜன் மீது மற்றொரு தேசத் துரோக வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில் சித்தார்த் வரதராஜன் மீதான நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அதே நாளில் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பர் மீது மற்றொரு தேசத் துரோக வழக்கு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.