இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள கே.ஏ.செங்கோட்டையன் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக  இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உண்மையானது இல்லை எனவும், கட்சியின் நிலையை நிரூபிக்க கால அவகாசம் வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.

Comments are closed.