நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருத்தணி அருகேயுள்ள அருங்குளம் கூட்டு சாலையில் நாளை (ஆக.30) காலை 10 மணிக்கு மரங்களுடன் பேசுகிறார்.
அங்குள்ள மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் ‘மரங்களோடு பேசுவோம், மக்களுக்காக பேசுவோம்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது. இம் மாநாட்டில் சீமானுடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் திரளாக பங்கேற்கின்றனர்.
இம் மாநாட்டையொட்டி, சீமான் கடந்த சில நாள்களுக்கு முன்பு, மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்று தோட்டத்தில் உள்ள மரங்களை முத்தமிட்டு மகிழ்ந்தார்.
அப்போது ஒரு மரத்தின் கிளையை பிடித்தபடி, “உனக்கு தண்ணி ஊற்றினார்களா? சாப்பாடு போட்டார்களா? எனப் பேசினார். அந்த வீடியோக்களை நாம் தமிழர் கட்சியினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Comments are closed.