விஜய்யிடம் தொலைபேசியில் கேட்டறிந்த ராகுல் காந்தி!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தவெக தலைவர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இன்று 2வது நாளாக ஒய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நேரில் பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, தவெக தலைவர் விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு நடைபெற்ற சம்பவம் குறித்து கேட்டறிந்ததாகவும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.