ஓய்பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2வது நாளாக விசாரணை!

கரூர் துயரச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் 2வது நாளாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று உறவினர்களிடம் விசாரணை செய்து தகவல்களை சேகரித்து வருகிறார்.

அருணா ஜெகதீசன் ஆணையம் சார்பில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை சம்பவ இடமான கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.


அதைத் தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நெரிசலில் சிக்கி காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வரும் நபர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், 2வது நாளாக இன்று (செப்.29) அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.

கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கரூர் டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய விசாரணை அதிகாரியாக ஏஎஸ்பி பிரேமானந்தன் நியமிக்கப்படுள்ளார்.

 

Comments are closed.